/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/50_38.jpg)
இயக்குநர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் 'உயிர் தமிழுக்கு' படத்தின் வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார். விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் காமாட்சி தற்போது தனது 'வி ஹவுஸ் புரொடக்சஷன்' நிறுவனம் சார்பாக இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் 'ராஜாகிளி' உள்ளிட்ட படங்களைத்தயாரித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)